ஸ்ரீரங்கத்தில் அகண்ட பாராயணம் நிகழ்ச்சி

0 263
Stalin trichy visit

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஸபா சார்பில் 32ம் வருட அகண்ட பாராயணம் நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஸபா சார்பில் 32ம் வருட அகண்ட பாராயணம் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடைஞ்சான் வீதியில் உள்ள தனியர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மற்றும் கர்நாடகா கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விஷ்ணு நிகழ்ச்சியில் ஸஹஸ்ரநாம பாராயண ஸபா நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி பாடலை பாடி பக்தர்களை மகிழ்வித்தனர். இந்த இசை நிகழ்ச்சியில் சாரா விஜயராகவன் புல்லாங்குழல் வாசிக்க ஸ்ரீரங்கம் ராம்ஜி வயலின் வாசித்தார்.கிரிதர சீனிவாசன் மிருதங்கம் மேளத்துடன் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் குருக்கள் ராம்ஜி மற்றும் சிங்கப்பூர் சிவராஜ், ரமா சடகோபன், ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி மோகன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண கோஷ்டி சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.