முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் நினைவு கால்பந்து போட்டி
திருச்சி, அக். 7 திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலராஜ் நினைவு கால்பந்து போட்டி திருச்சி மாவட்ட காங்கிரஸ் விளையாட்டு துறை தலைவர் ஆனந்த் தலைமையில் திருச்சி ஆர்சி பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு எழுவர் கால்பந்து போட்டியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் சேவா தளம் அப்துல் குத்தூஸ் என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் திரு கண்ணன் இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் சுக்ரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.