முதலமைச்சர் திருச்சி வருகை : ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி, அக்.21 தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு நாளை (22.10.2024) மாலை சுமார் 6.30 மணியளவில் வருகை தரவுள்ளதால்பாதுகாப்பு காரணம் கருதி இன்று (21.10.2024) முதல் தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
மேலும் நாளை (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து சென்னை செல்லவுள்ளதால் மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது. எனவே இன்று 21.10.2024 முதல் 22.10.2024 வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.