த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் சிவபதி: அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி, ஜூன் 8 அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி தவெக -வில் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முசிறி கைகாட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.
துரோகி சிவபதி ஒழிக அதிமுகவை பிடித்த சனியன் விட்டது என அதிமுக தொண்டர்கள் கோசமிட்டனர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 7 துறைக்கு அமைச்சராக்கி சிவபதியை அழகு பார்த்தார். ஆனால் சிவபதி இன்று அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டதாக தொண்டர்கள் குமுறல் குற்றச்சாட்டு