திருச்சியில் குழந்தையுடன் தாய் மாயம்

0 222
Stalin trichy visit

திருச்சி, டிச.30 திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளடியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (வயது50). இவரது மகள் கீர்த்தனா (வயது22) இவருக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணமாகி 1 1/2 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ந் தேதி கீர்த்தனாவை அவரது தாயார் ரேணுகா தேவி திருச்சி பெருகமணி, கீழ தெருவில் உள்ள அவரது கணவர் வெங்கடேசன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்ற கீர்த்தனா அங்கிருந்து தன் மகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் ரேணுகா தேவி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.