சட்டம் ஒழுங்குப்பிரிவில் நிரப்பப்படாத 1453 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள் : ஆர்.டி.ஐ.யில் தகவல்

0 253
Stalin trichy visit

திருச்சி டிச 30 – தமிழ்நாடு காவல்துறையில், பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடந்த 5 ஆண்டு காலமாக ஆயுதப் படையில் உதவி ஆய்வாளர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று பதவி உயர்வு வழங்காமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகியவற்றில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. (தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்) இதில் தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில், காவல் நிலையங்களில் ஆயிரத்து 453 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், ஆயுதப்படையில் (ஏஆர்) 649 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும், சிறப்பு காவல் படையில் (டிஎஸ்பி) 117 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளதாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.