வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

0 765
Stalin trichy visit

திருச்சி மிளகுபாறையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில்வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி முகாம்களைஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக செயல்படுத்தி வருகிறது.

 

அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில்தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று முகாம் நிறுத்தி வைக்கப்பட்டது, திருச்சிக்கு நேற்று முன்தினம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு நேற்று ஒருநாள் தடுப்பூசி முகாம் நடைபெற்றது,அதனை தொடர்ந்து இன்று அனைத்து தடுப்பூசி முகாம்களும் ரத்து என மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்.
ஆனால்  மேற்படிப்பு மற்றும் பனியின் நிமித்தமாக வெளிநாடு செல்பவர்கள்  கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியைசெலுத்திக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்,அதன்படி இன்று காலை மிளகுபாறையில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தும் பணி நடைபெற்றது. தடுப்பூசி முகாமில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த பின்பு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது .

Leave A Reply

Your email address will not be published.