திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா
திருச்சி, ஜன.13 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவல் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி கலந்து கொண்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
மேலும் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக காவல்துறையை சார்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக வயது வாரியாக 20 மீட்டர், 25 மீட்டர், 75 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், சாக்கு பையுடன் ஓட்டம், & , கோலப்போட்டி, மியூச்சிக்கல் சேர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கைபந்து போன்ற பல்வேறு போட்டிகன் காலை 0900 மணிக்கு தொடங்கி நடத்தப்பட்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் காமினி பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள். மேலும், திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் விழாவிற்கு தேவையான பொருள்களை கடைவீதிகளில் வாங்கி செல்லவும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாநகரம் முழுவதும் சுமார் 850 காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. விபத்துக்கள் இல்லாத பொங்கல் திருநாளை கொண்டாட திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். .