பொங்கல் பரிசுத் தொகுப்புகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி,ஜன.13 தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலுள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார், பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் மாரிச்சாமி, நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.