ரோட்டரி சங்கம்- ஸ்ரீ சூர்யா குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் பொங்கல் விழா

0 412
Stalin trichy visit

திருச்சி, ஜன.16  திருச்சி மாவட்டம், மணப்பாறை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ சூர்யா குதிரை ஏற்றம் பயிற்சி மையம் மணப்பாறை இணைந்து நடத்திய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது. கால்நடைகளை குளிப்பாட்டி, வர்ணமிட்டு அவைகளுக்கு பூஜைகள் செய்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் குதிரை ஏற்றப் பயிற்சி நடத்தி வரும் பாலசுப்ரமணியன் என்பவர்  மற்றும் தான் வளர்த்து வரும் குதிரைகளை மணப்பாறை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ சூர்யா குதிரை ஏற்றம் பயிற்சி மையம் மணப்பாறை இணைந்து வைத்து பொங்கல் கொண்டாடினர். அதன்படி காலையில் குதிரைகளை குளிப்பாட்டி தயார் படுத்தி வைத்திருந்த நிலையில் பின்னர் அங்கேயே பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் குதிரை ஏற்றப் பயிற்சியும் நடைபெற்றது. அதன்படி இளம் தலைமுறையினர் குதிரையில் ஏறி பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மணப்பாறை ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.  மணப்பாறை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மருதை கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணப்பாறை ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஸ்ரீதரன் ராவ் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் பயிற்சி மைய ஊழியர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.