சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : வீரர்களுக்கு பரிசு

0 250
Stalin trichy visit

திருச்சி, ஜன.16 திருச்சி மாவட்டத்தில் “2025 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி நேற்று (ஜன.15)  மாட்டுப் பொங்கல் சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது காலை 800 மணிக்கு துவங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாடுபிடி வீரர்கள் உறுதிமொழிக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 800 ஜல்லிக்கட்டு காளைகளும் 500மாடுபிடி வீரர்களும் முன் பதிவு செய்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட நிலையில் மாலை 4.50 மணியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது

7 சுற்றுகளாக நடைபெற்ற மொத்தம் 681 ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டன, இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியிலிருந்து நிராகரிக்கப்பட்டது, ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் 31, மாட்டின் உரிமையாளர்கள்35, மாடுபிடி வீரர்கள் 15, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இரண்டு என 82 பேர் காயம்

இதில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 13 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப்பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டன இந்த போட்டியில் 17 காளைகளை அடக்கிய சிறந்த மாடு பிடி வீரர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞர் முதல் பரிசு இருசக்கர வாகனத்தை தட்டி சென்றார்

ஜல்லிக்கட்டு போட்டியை  இத்தாலி நாட்டை சேர்ந்த வெளிநாட்டினர் கண்டு களித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.