நாட்டுப்புற பாடல்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

0 356
Stalin trichy visit

திருச்சி, ஜன.23  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தன்னார்வ அமைப்பினர் மாணவர்களிடையே கிராமிய இசையுடன் நாட்டுப்புற பாடல்கள் மூலம் ஹெல்மெட் மற்றும் சாலை விதிகள் குறித்தும், சாலை விதிகளை மற்றும் பாதுகாப்பினை கடைபிடிக்காமல் செல்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கிராமிய இசையுடன் பாடல்கள் பாடி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய பின் அங்கிருந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக கரம்பக்காடு பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குச் சென்று கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்த தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள், பளாளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.