சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து பணம் திருட்டு

0 272
Stalin trichy visit

திருச்சி, ஜன.24  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராஜீவ்நகரில் வசித்து வருபவர் பிலவேந்திரன் ( 48). இவர் திண்டுக்கல் சாலை மேம்பாலத்திற்கு அருகில் கடந்த 8 ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றவர், மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஒரு பக்க ஷெட்டர் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் ஷெட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பார்டிஷன் கண்ணாடியும் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் கடைக்குள் சென்றிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கல்லாவில் இருந்த ரூ.22 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக மணப்பாறை காவல்துறையினருக்கு இச்சம்பவம் பற்றி தகவல் அளித்தார்.

இச்சம்பவம் பற்றி தகவலறிந்து மணப்பாறை காவல் துணைக்கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்தும், தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவற்றை கொண்டும் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.