சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது

0 287
Stalin trichy visit

திருச்சி, ஜன.24  மணப்பாறை அருகே   சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில்  சட்டவிரோதமாக  மதுபானங்கள் விற்பனை செய்வதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் மணப்பாறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (43)  என்பவர் சட்டவிரோதமாக   மதுபானங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது இதனை அடுத்து சிவக்குமாரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 90 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.