மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் வி.சி.க.சார்பில் வீரவணக்கம்
திருச்சி ஜன 25: மொழிப்போர் தியாகிகள் தினம்
வி.சி.க சார்பில் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கடந்த 1965-ல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் மொழிப்போர் எதிர்ப்பினால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி மொழிப்போர் தியாகி தினமான இன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் உள்ள கீழப்பழுவூர் சின்னச்சாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடத்தில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, குருஅன்புச்செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், திருச்சி நாடாளுமன்ற செயலாளர் தங்கதுரை, இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, அமைப்புச் செயலாளர் அப்துல் நாசர், சிறுத்தை குணா, விஜயபாலு, தொகுதி துணைச் செயலாளர் ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயகுமார், வேல்முருகன், நூர்முகமது, அப்பாஸ், சௌகத் அலி, ஜீவா, வழக்கறிஞர் ரகுநாத், மற்றும் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிர்வாகி பாலன், மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.