அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல்

0 592
Stalin trichy visit

திருச்சி, ஜன.30  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருச்சி துறையூர் சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 150 க்கும் மேற்ப்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் 6 வாரங்களுக்கு மேல் 100 நாள் பணி செய்த கூலி பாக்கியை 1056 கோடி ரூபாய் உடனே விடுவித்திடுக

100 நாள் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட, வரும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் 4 லட்சம் கோடி ஒதுக்கிடுக,

200 நாள் வேலை, 600 ரூபாய் தினக்கூலி வழங்கிடுக,100 நாள் வேலையை நகர் பகுதிகளுக்கும் விரிவு செய்து அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திடுக,

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவப்பெருமாள் கோவில் ஊராட்சி, பிச்சாண்டார் கோவில் ஊராட்சி, கூத்தூர் ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியோடு இணைக்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இதில் தங்களது கோரிக்கை கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்தார் மாவட்ட ஆட்சியற்கு பரிந்துரை செய்கிறேன் என வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.