முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, ஜன.31 திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணி அளவில் திருச்சி வருகை தந்து மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா ஜாம்புரி தேசிய திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வில்
கலந்து கொள்ள உள்ளார்கள்
முதலமைச்சரை வரவேற்க விமான நிலையத்தில் மாநில,மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.