பழங்குடி இனப்பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

0 363
Stalin trichy visit

திருச்சி, பிப்.17 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பழங்குடி இனப்பெண்களுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு, மற்றும் இந்தியா சியாட்டில் குழு, அமெரிக்கா உதவியுடன் பழங்குடி இனப்பெண்களுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சியின் நிறைவு விழா 16.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:30 மணிக்கு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, சின்ன இலுப்பூர், பச்சைமலை, திருச்சி மாவட்டத்தில் நடைப்பெற்றது.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்  செல்வம்  வரவேற்புரை ஆற்றினார்,. பழங்குடி இன திருச்சி மாவட்ட திட்ட அலுவலர்  டி. ரெங்கராஜ்  நிறைவு விழா உரையில் இந்த நிகழ்வின் மூலம் பழங்குடி பெண்கள் கணினி அறிவைப் பெறுவதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளனர். நிகழ்வு முழுவதும் சிறப்பாக நடைபெற்றதோடு, இதில் பங்கேற்ற பெண்கள் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.
இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். கே.ஜெயபிரகாஷ் உதவி பேராசிரியர் அண்ணாமலை பல்கலைக்கழகம் அவர்கள் உரையில் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புற பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழிவகுப்பதாகும் என்று கூறினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் முனைவர்..L.R.அரவிந்த் பாபு  தனது வாழ்த்துச் செய்தியில் , கணினி கல்வியின் தொழில் மற்றும் தொழில்முறையில் கொண்டுள்ள தாக்கம் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.

திருச்சி சாலோம் பவுண்டேசன்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகம் அறங்காவலர் கே. கே. மாரிமுத்து பேசுகையில் பெண்கள் இந்த பயிற்சியின் மூலம் சுயதொழில் தொடங்குதல், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளை பெறுதல் போன்ற பல முன்னேற்றங்களை அடைய முடியும். என்று கூறினார்.
இப்பயிற்சியின் மூலம் முப்பது பழங்குடியின மாணவிகள் பயன் பெற்றனர். பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயிற்சி ஆசிரியர் சந்திரகுமார்  நன்றியுரை வழங்கினார்.

அமைப்பு செயலாளர்கள் முனைவர். கே.பிரவீனா மற்றும் முனைவர். கே.சாய்லீலா மற்றும் முனைவர் பாலமுருகன் பயிற்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.