மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி

0 306
Stalin trichy visit

திருச்சி, பிப்.21  திருச்சி மாவட்டம் தாளக்குடி அருகே வள்ளலார் நகரில் மின் சாரம் பாய்ந்து புதுமாப் பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெறும்பூர்  தாலுகா அரியமங்கலம் குவளக்குடியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன்  சக்திவேல் (25) . இவர் நெம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள அகிலாண்டபுரம் வள்ளலார் நகரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது.பேக்கரி கடையின் மேலே புதிதாக பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் நேற்று சக்திவேல் ஈடுபட்டார். அப்போது பிளக்ஸ் போர்டில் இருந்த இரும்பு கம்பி கடையின் மேலே சென்ற மின்கம்பியின் மீது பட்டது. இதனால் பிளக்ஸ் போர்டை பிடித்துக் கொண்டிருந்த சக்திவேலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட -அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் | சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.