மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து சேவை தொடக்கம்

0 254
Stalin trichy visit

திருச்சி, பிப்.21 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தை பார்பேரூராட்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வேண்டி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம், கூத்தைபார் கிராம மக்கள்கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூத்தைப்பார் கிராமத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்து பேருந்திலும் பயணம் செய்தார்.

இப்பேருந்து துவாக்குடி நகர் கிளை நகர பேருந்து வழித்தடத்தில் இருந்து தினமும் காலை 7 .40 மணிக்கு துவாக்குடியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் வழியாக கூத்தைபார் வந்தடைகிறது. கூத்தைபார் கிராமத்திலிருந்து 8:20 க்கு புறப்பட்டு திருவெறும்பூர், மார்க்கெட், பாலக்கரை வழியாக சத்திரம் நோக்கி செல்கிறது. தினமும் இரண்டு முறை இந்த போக்குவரத்து சேவை நடைபெறும் என்று போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன். திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி கூத்தாப்பர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் , கூத்தாப்பர் பேரூராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் அரசு போக்குவரத்து திருச்சி மண்டலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி ,பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் சுரேஷ்குமார் ,துவாக்குடி நகர கிளை மேலாளர் ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.