கொங்கு நாடு கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி, , மார்ச் , 4 தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவன வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அகில இந்திய கட்டுனர் சங்க நாமக்கல் மையம், சுவாமி விவேக்கானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து தொட்டிம் கொங்குநாடு கல்வி நிறுவன கல்லூரி கூட்ட அரங்கில் மூன்று நாட்கள் பொது மருத்துவ முகாம் துவக்க விழா
நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவன தலைவர் முனைவர் பி எஸ் கே பெரியசாமி தலைமை வகித்தார். கொங்குநாடு கல்வி நிறுவன பொருளாளரும் அகில இந்திய கட்டுனர் சங்கம் நாமக்கல் கிளையின் தலைவருமான
பி எஸ் டி வி எஸ் தென்னரசு முகாமினை துவக்கி வைத்தார்.
கொங்குநாடு பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட மாணவர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை சரிப்பார்த்தல் மற்றும் இ சி ஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேல் மருத்துவ பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டால் அவர்களுக்கான செலவை அகில இந்திய நாமக்கல் மைய கட்டுனர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார். இந்நிகழ்வில் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.