மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து 20 பெண் தொழிலாளர்கள் காயம்
திருச்சி, மார்ச் 4 மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து 20 பெண் தொழிலாளர்கள் காயம்
மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆலத்தூரில் தனியார் பனியன் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்துதொழிலாளர்கள் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதே போல்நேற்று மாலை பணி முடித்து விட்டு இளங்காகுறிச்சி வழியாக புத்தாநத்தம் நோக்கி சென்ற பயணிகள் வேன் இளங்காகுறிச்சியை அடுத்த நத்தம்புதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பெண் தொழிலாளர்கள் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.