மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
திருச்சி, மார்ச் 4 மணப்பாறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த போது கரப்பட்டியைச் சேர்ந்த பிச்சன் என்ற ராஜா வயது 45 என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. தோட்டத்திற்கு விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பெண்ணின் தாத்தாவிற்கு இதுகுறித்து தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாத்தா மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சன் என்ற ராஜாவை கைது செய்தனர்.