ஹவுரா ரயிலில் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
திருச்சி, மார்ச் 4 திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை – ஹவுரா ரயிலில் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் L .பாஸ்கர், DSP/NIB/CID/Trichy மற்றும் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில் இன்று 04.03.2025 திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் ரயில் எண்.12663 ஹவுரா- திருச்சி எக்ஸ்பிரஸ் -ல் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கையின் போது மேற்கூறிய வண்டியில் சந்தேகத்திற்குரிய ஒரு காக்கி கலர் மூட்டை கிடந்தது. அதை சோதனை செய்த போது, அதில் 2.200 கிலோ உலர் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.
பின்னர் மேற்கூறிய கைப்பற்றப்பட்ட ரூ.22,000/- மதிப்புள்ள 2.200 கிலோ (தோராயமாக) கஞ்சாவை தேவையான சட்ட நடவடிக்கைக்காகவும், அகற்றுவதற்காகவும் கே.விஸ்வநாதன் L .பாஸ்கர், DSP/NIB/CID/Trichyயிடம் ஒப்படைக்கப்பட்டது.