மறைந்த கவிஞர் நந்தலாலா இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்

0 552
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநிலத் துணைத் தலைவர், களம் அமைப்பின் ஆலோசகர் மறைந்த கவிஞர் நந்தலாலா நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ளது.

நாடறிந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் நந்தலாலா (70), உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மார்ச் 4ஆம் தேதி) காலை இயற்கை எய்தினார்.

இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நந்தலாலாவின் இயற்பெயர் நெடுஞ்செழியன். பாரதியார் மீது கொண்ட தீராப்பற்றின் காரணமாக தனது பெயரை ‘நந்தலாலா’ என வைத்துக் கொண்டார்.

திருச்சியில் 1990-களில் அவர் ஒருங்கிணைத்த ‘சோலைக்குயில்’ என்ற பத்திரிகையும், அமைப்பும் ஏராளமான இலக்கியவாதிகளை உருவாக்கியது.

பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிக் கருத்தியலை மேடைதோறும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் எடுத்துச் சென்றவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

நந்தலாலாவுக்கு மனைவி ஜெயந்தி, மகள்கள் பாரதி, நிவேதிதா ஆகியோர் உள்ளனர்.

பெங்களூருவில் இருந்து அவரது உடல், (புதன்கிழமை) அதிகாலை திருச்சி வந்தடையும். திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகர், திருநகர் 3ஆவது பிரதான வீதியிலுள்ள அவரது இல்லமான ‘காணி நிலத்தில்’ உறவினர்கள் மற்றும் தோழர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

நாளை  (மார்ச் 6) முற்பகல் 11 மணிக்கு வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி, 12 முதல் ஒரு மணிக்குள் ஓயாமாரி எரிவாயு மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

திருச்சியின் காத்திரமான இலக்கிய அமைப்பாக ‘களம்’ உருவாவதற்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தாளர் ஞாநியுடன் ஆலோசகராக இருந்து தொடர்ந்து வழிகாட்டி வந்த நந்தலாலாவின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை களம் தெரிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.