தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை: அருண்நேரு எம்.பி. பேட்டி

0 695
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5  தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. பெரம்பலூர் நாடாளுமன்ற  உறுப்பினர் கே.என் அருண் நேரு பேட்டி

தமிழக முதல்வர்   ஆணையின்படியும்,    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  ஆலோசனையின் படியும், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலோடு
திருச்சி மாவட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக மாபெரும் விழிப்புணர்வு முகாம்   இன்று சமயபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமை பெரம்பலூர் நாடாளுமன்ற  உறுப்பினர் அருண் நேரு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் பெரம்பலூர், குளித்தலை, மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி துறையூர், முசிறி, தொட்டியம், தா .பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள  தொழில் முனைவோர்கள் மற்றும் குறு ,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்  பங்குபெற்றன.

மேலும் வாழை ஆராய்ச்சி நிறுவனம், தொழில் குழுமங்கள், வங்கியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ,துறை அலுவலர்கள், தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை வழங்கினர்.

தொழில் முனைவோருக்கான அனைத்து விதமான சந்தேகங்கள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள், வணிகம் செய்ய வேண்டிய முறை, வங்கிக்கடன் பெற தேவையான ஆவணங்கள், அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் உட்பட அனைத்து சந்தேகங்களுக்கும் முறையான தீர்வுகள் வழங்கப்பட்டு தொழிலில் வெற்றி பெற  வழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டது.

இது மட்டுமன்றி, பல்வேறு அரசுத் துறைகள் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்களை
எடுத்துக் கூறினர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அருண் நேரு எம்.பி.  கூறுகையில்..

பெரம்பலூர் ரயில் சேவை திட்டம் ரயில்வே மத்திய அமைச்சரிடம்  இரண்டு முறை வலியுறுத்தியுள்ளேன் இது சம்பந்தமாக ரயில்வே சார்பாக சேர்மேனையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன் மத்திய அரசு பெரம்பலூர் ரயில் சேவை தொடங்கும் வரை நான் விடப் போவதில்லை அருள் வேறு பேச்சு.

அதனை தொடர்ந்து லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை கூடிய விரைவில் ரயில்வே துறை அதிகாரிகள் டிஆர்எம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கூடிய விரைவில் ஆய்வு செய்யப்படும் என கூறினார்.

தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல முன்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது.இரு மொழி கொள்கையே எங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கிறது.இந்தியாவை விடை எங்களது குழந்தைகள் அதிக அளவில் படித்து வருகிறார்கள்.உங்களது முன்மொழி கொள்கையை விட எங்களது இரு மொழி கொள்கையில் பிள்ளைகள் நன்கு படித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் அவர்கள்  முன்மொழிக் கொள்கை தேவையில்லை இரு மொழி கொள்கையே போதும் என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.