முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள் : அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 224
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5  முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் : அமைச்சர்  அன்பில்  மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் மேனாள் அமைச்சரும்  ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம்  32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு    பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் பாடநூல் கழக தலைவர் லியோனி, மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அரங்கநாதன் சேகரன் சபியுல்லா பகுதி கழகச் செயலாளர் மோகன் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.