பயணிகளிடம் திருட முயன்ற 4 பேர் கைது
திருச்சி,மார்ச் 6 மணப்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் திருட முயன்ற 4 பேர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புதுவாடியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய பொழுது மர்ம நபர் ஒருவர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுப்பதைக்கண்டு கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திருடிய நபரையும் அவருடன் வந்தவர்களையும் பிடித்து மணப்பாறை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மணப்பாறை காவல்துறையினர் விசாரணை செய்ததில் திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (35), பெரியமிளகுபாறையைச் சேர்ந்த பாலமுருகன் (45), ராமசந்திரா நகரைச் சேர்ந்த கௌதம் (26), தோகைமலையைச் சேர்ந்த சரவண பாண்டியன் (49) என்பது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேர் மீதும் பல திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.