மொழிப்போர் தியாகிகளின் நெருப்பு அணைந்துவிட வில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ்

0 394
Stalin trichy visit

திருச்சி,மார்ச் 6 மொழிப்போர் தியாகிகளின் நெருப்பு அணைந்துவிட வில்லை, எங்களை போன்றோரின் மனதில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், அரியமங்கலம் பகுதி கழகம் சார்பில் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் இன்று திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள டி.எம்.ஆர். மஹாலில் நடை பெற்றது.’
வட்ட செயலாளர் ரெங்க நாதன் வரவேற்றுப் பேசி னார். அரியமங்கலம் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பள்ளிகல்வித்துரை அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாநகர செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னைஅரங்கநாதன் சேகரன் சபியுல்லா மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு மூக்கன் துணை மேயர் திவ்யா, மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கான், சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வன் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ்ராஜ், ராஜ்முகம்மது, மோகன், மணிவேல், பாபு, சிவக்குமார் மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில்… இதுவரை தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களில் மக்கள் அப்பா என அழைக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். ஆளுநர் சொல்வதை எல்லாம் செய்யக்கூடிய கிளிப்பிள்ளை, பொம்மை நான் இல்லை என பதவி ஏற்பு விழாவில் மெய்பித்தவர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினை அப்பா என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிபி யில் கொந்தளிக்கிறார் சிவி சண்முகம்.

அம்மாவையே மாற்றிய அதிமுகவினருக்கு அப்பாவின் அருமை எப்படி தெரிய போகிறது.

தமிழகத்தின் தொகுதியை குறைக்க மாட்டோம் என சொல்லும் மத்திய அமைச்சர் உத்தரப்பிரதேசத்தில் தொகுதியை அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.

குடும்ப கட்டுப்பாட்டை முறையாக பின்பற்றிய மாநிலம் தமிழகம், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யும் போது அதை முறையாக பின்பற்றாத உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் திணிக்கிற செயல் எதற்காக என்றால் பள்ளிக்கல்வித்துறை தான் என்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் துறையாக இருக்கிறது இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல்பாடுகளை முடக்கவே பாஜக ஒன்றிய அரசு நிதியை தராமல் முடக்க பார்க்கிறது. ஆனால் எந்த வகையில் தடுத்தாலும் பள்ளிக்கல்வித்துறை இந்தியாவிலேயே முதல் துறையாக மாற்றும் ஆற்றல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு உள்ளது என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்…

தொகுதி மறுசீரமைப்பில் ஒன்றிய அமைச்சர் உங்களுடைய தொகுதி அப்படியே தான் இருக்கும் என்கிறார்.ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதியை அதிகப்படுத்தி பெரிதாக உள்ள தமிழகத்தின் கோட்டை எங்களுக்கு தெரியாமல் அருகில் பெரிய கோடு போட்டு சிறியதாக்க முயல்கின்றனர்.தமிழக மக்களை காப்பாற்ற கடமை கொண்டிருக்கும் வீரன் தமிழக முதலமைச்சர். கூட்டாட்சி என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பதை வீழ்த்த தமிழக முதலமைச்சர் முனைந்து வருகிறார். இந்தி திணிப்பால் இழக்க நேரிடுவது பணம் மட்டுமல்ல, நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் தான். மொழி அழிந்தால் இனமே அழிந்துவிடும், அத்தகைய நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்தி திணிப்பிற்காக போராடிய தியாகிகளின் நெருப்பு மறைந்து விட்டதாக எண்ண வேண்டாம், அது இன்னும் எங்களைப் போன்றோரின் மனதில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

கூட்டத்தில் மறைந்த கவிஞர் நந்தலாலாவிற்கு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ்  இரங்கல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.