திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் சத்யராஜ்(36). இவர் பொன்மலைப்பட்டி புதுப்பாலம் அருகே இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த பொன்மலை தங்கேஸ்வரி நகரை சேர்ந்த பரதன்(24), கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கெவின்குமார்(26), பொன்மலை மாஜி ராணுவ காலனி 6வது தெருவை சேர்ந்த வீரமணி(22) ஆகிய 3 பேரும் சேர்ந்து சத்யராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து சத்யராஜ் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பரதன், கெவின் குமார், வீரமணி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.