பெல் நிறுவனத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய பேருந்து சேவை

0 369
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 10  திருவெறும்பூர் அருகே உள்ள பெல் ஊரக பகுதியில் இருந்து சென்னைக்கு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வகையில் புதிய பேருந்து வழிதடத்தை தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஊர்களிலிருந்தும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் எளிதாக சென்னைக்கு சென்று வரும் வகையில் பெல் ஊரகப்பகுதியில் இருந்து சென்னை கிளம்பாக்கத்திற்கு நேரடியாக அரசு பேருந்து போக்குவரத்து இயக்க வேண்டுமென தமிழக பள்ளி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமலியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிய வழித்தடத்தில் சென்னை கிளாம்பக்கத்திற்கு பேருந்து தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ண முன்னிலை வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெல்ஊரகப் பகுதியில் இருந்துசென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்தானது நாள்தோறும் இரவு 10 மணிக்கு பெல் டவுன்ஷிப்பில் இருந்துசென்னை கிளாம்பாக்கத்திற்கு புறப்படும் அதே போல் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மறுநாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலை 4 55 மணிக்கு பெல் டவுன்ஷிப் வந்தடையும்.

இந்த விழாவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.