தென் மாநிலங்களில் பாசிச பாஜகவின் மத அரசியல் எடுபடவில்லை: காங்.செய்தி தொடர்பாளர் பேட்டி

0 244
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 10  தென் மாநிலங்களில் பாசிச பாஜகவின் மத அரசியல் எடுபடவில்லை,  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம்  பேட்டி

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் மணப்பாறையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக , தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறையக்கூடும் என்ற அச்சத்தில், சமீபத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், குழந்தைப்பேறை தள்ளி வைக்க வேண்டாம் என்றும், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியது குறித்து கேட்டபோது,

காங்கிரஸ் கட்சி முதல்வரின் கருத்தை ஆதரிப்பதாகவும், எந்தளவிற்கு அழுத்தம் இருந்தால் இவ்வாறு முதல்வர் தெரிவித்திருப்பார்‌ தென் மாநிலங்களில் பாசிச பாஜகவின் மத அரசியல் எடுபடவில்லை. அதற்கு பாஜக எடுத்துள்ள ஆயுதம் தொகுதி மறுசீரமைப்பு. என்று பதில் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.