வரைபடத்தின் மூலம் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு
மண்ணச்சநல்லூர், மார்ச் 31 மண்ணச்சநல்லூரை அடுத்து உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு (PRA) நடத்திய வேளாண் மாணவர்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து உள்ள அய்யம்பாளையத்தில் எம்ஐடி வேளாண் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீதர், சுபாஷ், தமிழ்செல்வன், திரிநேத்ரா, தமிழ்செல்வன்,தமிழ்வாணன், திருப்பதி, விஜயகுமார் ஆகியோர் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு(PRA) என்ற செயல்பாடு நடத்தி வரைபடத்தின் மூலமாக ஊர்ப் பொதுமக்களுக்கு அங்கு உள்ள சூழ்நிலையை விளக்கினர். கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு(PRA) மக்களின் வாழ்வாதாரம், வளங்கள், தேவைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை.(PRA )இன் முக்கிய நோக்கம்
கிராமப்புற மக்களின் அறிவை மதிப்பிடுவதன் மூலம், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை உருவாக்குவது.
வளர்ச்சித் திட்டங்கள், திட்டமிடல், பயிற்சி, ஆலோசனை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போன்ற பல துறைகளில் (PRA) பயன்படுத்தப்படுகிறது போன்ற முக்கிய செய்திகளை ஊர்ப்பொதுமக்களுக்கு வேளாண் மாணவர்கள் விளக்கினர்.