கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

0 241
Stalin trichy visit

திருச்சி ஏப். 10  திருச்சி கண்டோன்மெண்ட் அலெக்ஸாண்ட்ரியா ரோடு ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் குப்பமுத்து (வயது 56 ) ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இவர் தற்போது எம்.இ.எஸ் பிரிவில் 117 – பட்டாலியனில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று ராணுவ அதிகாரி குப்பமுத்து கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கத்தி முனையில் இவரை மிரட்டி ரூ.40,000 பணம் கேட்டுள்ளார். இவர் தர மறுத்தார்.உடனே இச்சம்பவம் குறித்து ராணுவ அதிகாரி குப்பமுத்து கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் கொட்டப்பட்டு மதுரை வீரன் கோவில் தெரு, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.  அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.