போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது
திருச்சி ஏப்.10 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சண்முகசுந்தரபுரம் பி.எஸ்.எஸ் நகரை சேர்ந்தவர் காசி. இவரது மகன் நீதிபதி (வயது 59 ). இவர் ஏர் ஏசியா விமான மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் கவுண்டர் எண் – மூன்றில் பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது நீதிபதியின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது .இது குறித்து ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்து, இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் நீதிபதியை போலீசாரிடம் ஒப்படைத்தார். ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து நீதிபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.