பழிக்குப்பழி கொலை செய்ய காத்திருந்த இருவரை கைது செய்த தனிப்படையினர்!
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் மணல்மேடு அருகில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த அதே பகுதியை சேர்ந்த பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி(20), சுரேஷ்(33) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் சோதனை செய்ததில் வெட்டுவாள் மற்றும் அருவாள் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக இருவரையும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கடந்த வருடம் அக்டோபர் 10ம் தேதி தட்சணாமூர்த்தியின் தந்தை இறந்து போன விவகாரத்தில் குற்றவாளிகளைப் பழிக்குப்பழி நோக்கத்தோடு திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு தட்சணாமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் விரைந்து செயல்பட்டதால் பழிக்கு பழிவாங்கும் நிகழ்வாக நடைபெறும் இந்த கொலை சம்பவத்தை உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது. கொலை சம்பவத்தை தடுத்து, வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த தனிப்படையினர் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டினார்.