மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம்!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 வது வார்டுக்கு செல்லமணி என்பவரும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 6 வது வார்டுக்கு சபியுன்நிஷா என்பவரும் திமுக சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. குளத்தூரான்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சேகரன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வேட்பாளர் செல்லமணியை அறிமுகம் செய்து பேசினார். இதேபோல் வையம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு வேட்பாளர் சபியுன்நிஷா வை அறிமுகம் செய்து பேசினார்.

கூட்டங்களில் வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக பொருப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைப்போல நடைபெற உள்ள ஒன்றியக்குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெற கட்சியினர் உழைக்கவேண்டும் என உறுதியேற்றுக்கொண்டனர். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், கோவிந்தராஜன், மாவட்ட ஒன்றியக்குழு தலைவர்கள் குணசீலன், அமிர்தவள்ளி, பழனியாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, செல்வராஜ், சின்னடைக்கன் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன், மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.