அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஏப்.12 அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தனது சொந்த நிதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளான திருவெறும்பூர் கும்பகுடி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அதே போல் அசுர் ஊராட்சி பொய்கைகுடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் தேவராயன் ஏரி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி அதேபோல் கிறிஸ்ன சமுத்திரம் ஊராட்சியில் உள்ள குமரேசபுரம் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி ஆகியஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தனது சொந்த நிதி ரூபாய் 2. 50 லட்சம் மதிப்பீட்டில்மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் தாகம் தீர்க்கும் நோக்கத்தோடு புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பினை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்
மேலும் குடிநீர் இணைப்பினை திறந்து வைத்ததுடன் அதனை ஆய்வு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் திருவரம்பூர் வட்டார கல்வி அலுவலர் பெஞ்சமின் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்