தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

0 335
Stalin trichy visit

திருச்சி, ஏப். 14  வையம்பட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் அதிக அளவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வையம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து வையம்பட்டி காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். செட்டியபட்டியில் ஆய்வு நடத்திய போது முத்துக்கருப்பன்( 70) மற்றும் லிங்கம் (60) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இவர்கள் இருவரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.