கவுன்சிலருக்கு ஆதரவாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
திருச்சி, ஏப்.22 திருச்சி மாநகர கவுன்சிலருக்கு ஆதரவாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க குவிந்த பொதுமக்களால் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி 57வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வம் இவர் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் வார்டுக்கு உட்பட்ட நல்ல தண்ணி தேநீர் தெருவில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்ச்சாலையை சேதப்படுத்தியதாகவும் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவரிடம் சென்று கவுன்சிலர் முத்துச்செல்வம் விளக்கம் கேட்டுள்ளார் அப்போது அந்த பெண்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுன்சிலர் முத்து செல்வம் புகார் மனு அளிக்க வருகை தந்தார் அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கான அவருக்கு ஆதரவாக கமிஷனர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகர துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு வருகை தந்த பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர் இதற்கு மறுப்பு தெரிவித்து அனைவரும் புகார் கொடுக்க வந்துள்ளோம் என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது போலீசருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.