வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு
திருச்சி, ஏப்.29 திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு INDIAN CONTRACT ACT 1872 (இந்திய ஒப்பந்த சட்டம் ) என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது
நிகழ்வினை மூத்த வழக்கறிஞர் S. P. சௌந்தர்ராஜன் துவக்கி வைத்தார்
வகுப்பினை வழக்கறிஞர்கள் P. K. கனகலட்சுமி மற்றும் V. கீர்த்திவர்ஷினி (மாணவி) ஆகியோர் நடத்தினார்கள்.
இந்நிகழ்வில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட் வரவேற்றார் திருச்சிவழக்கறிஞர் சங்க துணை தலைவர் R.வடிவேல்சாமி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் 150 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.