முடிவுற்ற திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நிதியில் தனது தொகுதிக்குட்பட்ட ரூபாய் 67 லட்சத்து 25000 மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டபணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர்
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணியகுறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் மற்றும் கழிவறை இதனை அடுத்து வேங்கூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை மற்றும் கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரேசபுரபகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மேலும் கிளியூர் ஊராட்சியில் தரைதளம் நீர்த்தேக்க தொட்டி இதே போல் அரசங்குடி ஊராட்சியில் நீர் தேக்க தொட்டி என ரூபாய் 67 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இந்நிகழ்வில் திருச்சி முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா வட்டார கல்வி அலுவலர் ரெஜினா, ஆர்டிஓ அருள் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவரம்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா மற்றும் அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ், உட்பட அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.