ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 347
Stalin trichy visit

திருச்சி மே 5 குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் சட்டத்தை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் – ஏ ஐ டி யு சி சங்கத்தினர் வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்

ஏ ஐ டி யூ சி அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் அறிவியல் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணய செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் சட்டத்தை தமிழக மற்றும் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக  திருச்சி ஏ ஐ டி யு சி சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில் கோரிக்கை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம், மாவட்ட பொதுச் செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஏராளமானோர் கோஷமிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் சுரேஷ் காரல் மார்க்ஸின் 208வது பிறந்தநாளில் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை தினமாக இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறைந்தபட்ச ஊதியம் என்பது பல்வேறு கால போராட்டங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளது.

10 ஆண்டுகளாக பொறுப்பேற்றிருக்கும் மோடி அரசு தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை நான்காக சுருக்கி இ எஸ் ஐ யில் கொடுத்து வந்த பிரதிபலன்கள், ஊனமுற்றோர் தொழிலாளருக்கு வழங்கப்படும் 90 சதவீத உதவி தொகை அனைத்தும் இந்த சட்டங்களால் முடக்கப்பட்டுள்ளது.

இன்று விலைவாசியை கணக்கிட்டு குறைந்தபட்ச ஊதியம் 32ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி, , ஊராட்சிகளில் சம்பளம் நிர்ணயத்தும் கூட இது மறுக்கப்பட்டுள்ளது. ESI, PF பிடிக்கப்பட்டு தனி நபர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அந்தப் பணங்கள் எல்லாம் இன்று சூறையாடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஏஐடியூசி உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்வு பெற்று குறைந்தபட்ச சம்பளத்தை அமல்படுத்துவதற்கான தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நடைமுறை தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சட்டத்தை தமிழக அரசும் மற்ற மாநிலங்களும் பின்பற்றி குறைந்தபட்ச ஊதியத்தை எல்லா துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.