விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து பயிற்சி
திருச்சி, மே 9 திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசனம் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம்
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் (SSEPERS) 2025 – 2026
B2.bஉள் மாநில அளவிலான விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து 3 நாள் பயிற்சி வகுப்புகள் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மண் மற்றும் நீர் வளம் பாதுகாப்பு பொறியியல் துறையின் பயிற்சி ஆசிரியர் முனைவர் ஜனனி பசுமை கூடாரத்தின் கீழ் சொட்டுநீர் பாசனத்தில் காலிபிளவர், குடை மிளகாய், தக்காளி சாகுபடி குறித்தும் தென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி மற்றும் நீர் சேமிப்பும் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.
உதவி பேராசிரியர் ஆர்த்தி நுண்ணுயிர் பாசனத்தில் நீரின் தன்மை ,அதில் உள்ள அமிலத்தன்மை காரத்தன்மை, நீரின் அளவீடு விகிதம் அதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
இந்த பயிற்சி வகுப்பில் தச்சன் குறிச்சி, பூவாளூர், செம்பரை, கோமாகுடி கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் இந்த பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மேலாளர் சபரி செல்வன், உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.