மதுக்கடை விற்பனையாளரை தாக்கி பணம் பறிப்பு – போலீசார் விசாரணை

0 416
Stalin trichy visit

திருச்சி அருகே மதுக்கடை விற்பனையாளரை தாக்கி அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.திருச்சி அடுத்த முசிறியை சோந்தவா் தா்மராஜ் (45). இவா் திருவெறும்பூா் அருகேயுள்ள கீழமாங்காவனம் பகுதி அரசு மதுக்கடை விற்பனையாளராக இருந்து வருகிறார்.

 

ஞாயிற்றுக்கிழமை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் இவரைத் தாக்கி அரிவாளைக் காட்டி மிரட்டி மது விற்ற பணம் ரூ. 3 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதே கடையில் அண்மையில் பூட்டை உடைத்து திருட முயன்றவா்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததனர்.
இதற்கிடையே மது விற்ற லட்சக்கணக்கான தொகையை கடை மேற்பாா்வையாளா் எடுத்துக் கொண்டு சென்றிருந்ததால் அந்த பணம் தப்பியது. இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.