தானாமுளைத்த மாரியம்மன் கோவில் பால்குட விழா
திருச்சி, மே 27 மணப்பாறை அருகே தானாமுளைத்த மாரியம்மன் கோவில் பால்குட விழா
ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணப்பட்டியில் புகழ்பெற்ற தானாமுளைத்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று (மே 26) காலை பால்குட விழா நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் பக்தி பரவசத்துடன் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பால்குடத்தை சுமந்து வந்தனர். இதையடுத்து பால்குடம் ஆலயம் வந்தடைந்ததும் வழிபாடுகள் நடைபெற்றது. இதே போல் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.