மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருச்சி, மே 27 மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன்உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள் ளஅயன்பொருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (15) 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கான சென்று அங்குள்ள மின்மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு துவரங்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறிய நிலையில் இறந்த மாணவனின் உடல் உடற்கூறு ஆய்விற்கான மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.