முசிறி நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து

0 186
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4   முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள்ளே பின்புறம் பயன்பாடற்று இருந்த சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் முட்புதர்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி மக்கள் கரும் புகை மண்டலம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். முசிறி தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த புதர்களை அணைத்தனர்,

திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி அலுவலகம் அருகே குற்றவியல் நீதிமன்றங்கள் நடைபெறும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது, வளாகத்தின் நீதிமன்றம் பின்புறமாக சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயன்பாடற்ற முட்புதர் மண்டி புதர்கள் இருந்துள்ளது.மர்ம நபர்கள் அப்பகுதிகளில் தீ வைத்துள்ளதால் முட்புதர்கள் முழுவதும் அதிக அளவு எரிந்து கரும்புகை மூட்டத்துடன் சுற்று வட்டார பகுதிகளில் பரவியது, இதனால் நகராட்சி மற்றும் நீதிமன்ற வளாகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரும்புகை அடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், மூச்சு திணறலையும் ஏற்படுத்தியது,
தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு தறையினர் விரைந்து நிகழ்விடத்திற்கு‌ விரைந்து தீயை சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் தீப்பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
தீ விபத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது முட்புதர்கள் மட்டுமே முற்றிலும் எரிந்தது..தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.