கனிமவள கொள்ளைக்கு துணைபோகும் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர் : நடவடிக்கை கோரி சரக டி.ஐ.ஜியிடம் புகார்
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், அதன் தலைவர் செல்லராசாமணி தலைமையில், கரூரில் கனிமவள கொள்ளைக்கு துணைபோகும் ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஐஜி வருண்குமாரிடம் புகார் அளித்தனர்
கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த மே 27ஆம் தேதியன்று முறைகேடாக உரிய ஆவணங்கள் இன்றி கனிமவள கொள்ளையில் ஈடுபடும் விதமாக எம்.சாண்ட் ஏற்றிவந்த இரண்டு லாரிகளை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கனிமவள கொள்ளையை தடுக்காமல், ரொம்ப புகார் அளித்த மணல்லாரி உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து, தனியார் திருமணமண்டபத்தில் அடைத்துவைத்ததுடன், கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு லாரிகளையும் கிரஷர் உரிமையாளர்களை விடுவித்துள்ளதாகவும், கனிமவள கொள்ளைக்கு துணைபோகும் லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக டிஐஜி வருண்குமார் அவர்களிடம் அளித்த புகாரில், உரியவிசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருப்பதாகவும் செல்லராசாமணி தெரிவித்தார்