இந்து முன்னணி, பா.ஜ.க-வினரை கண்டித்து மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

0 195
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 23  திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக காலிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டிருந்த போது, தொண்டர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் சரத்குமார் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி, பாஜகவை கண்டித்து சனிக்கிழமை மாலை  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பின் சார்பில் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி ஆகியோரை கண்டித்தும், தாக்குதல் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் மாவட்டச் செயலாளர் ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன உரையைமாநில பொதுச் செயலாளர் கோவன் வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி கும்பல்கள் தமிழக ஆட்சியைப் பிடிக்க நடத்தும் கலவரங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.